சுடச்சுட

  

  தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம்

  By DIN  |   Published on : 03rd January 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  கடலூர் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் பகுதிகள் வழியாக மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் மணலைத் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன.
  இவை, நெடுஞ்சாலையிகளில் வேகமாகச் செல்லும் போது, காற்றில் பரந்து வரும் மணல் துகள்கள், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண், முகத்தில் வேகமாகத் தாக்குவதால் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது.
  நீண்ட தொலைவு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான பாரத்துடன் செல்கின்றன. மணல், கிராவல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், அவை காற்றில் பறக்காமல் இருக்க தார்ப்பாயைப் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும். 
  ஆனால், பெரும்பாலான லாரிகளில் அவ்வாறு தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்வதில்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் மணல், கிராவல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai