சுடச்சுட

  

  வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.
  வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பழனி (28). இவரது மனைவி அமுதவல்லி (22). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.
  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பழனி இரு சக்கர வாகனத்தில் வந்தவாசிக்குச் சென்று தனது டிராக்டருக்கு டீசல் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி - விளாங்காடு சாலையில் சளுக்கை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் பழனியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அமுதவல்லி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் 
  வழக்குப் பதிந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai