சுடச்சுட

    

    வடலூரில் தைப்பூசப் பெருவிழா: ஜன. 21-இல் உள்ளூர் விடுமுறை

    By DIN  |   Published on : 03rd January 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூசப் பெருவிழா ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தைப்பூச ஜோதி தரிசனமாகும். இந்த நாளில், 7 திரைகளை விளக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படும். இதைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். புகழ் பெற்ற இந்த விழாவானது, வருகிற 21- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளுக்கு மாற்றாக பிப். 2 -ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai