கேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

கேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

கேபிள் டி.வி. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கோவி.கல்விராயர் தலைமையில் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.தங்கம், க.திருநாவுக்கரசு, பால்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் சங்கத்தின் செயல் திட்டம், விழிப்புணர்வுப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் அரசின் சார்பில் அலுவலகப் பணி தொடர்புக்காக வருவாய்த் துறை, பொது விநியோகத் துறை, போக்குவரத்துத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் தொடர்பு எண்கள்  (இமஎ)  வழங்கப்பட்டுள்ளன. 
ஆனால், இந்த எண்களை பொதுமக்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சியூஜி எண்களை முறையாகப் பயன்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
போக்குவரத்துத் துறையில் பல்வேறு சேவைகளின் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து வருகிற 29- ஆம் தேதி மாவட்டத்திலுள்ள 11 போக்குவரத்துப் பணிமனைகள் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் டி.வி.யில் சேனல்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கொண்டு வந்துள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசு சார்பில், செட்டாப் பாக்ஸ்கள் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், டிராயின் அறிவிப்பு தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்த கொண்டு வந்ததாகவே அமையும். மேலும், அரசின் டி.டி.எச். திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சேனல்கள் இலவசமாக இருக்கும் போது, தற்போது 100 சேனல்களுக்கு ரூ. 160 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நுகர்வோர்களைப் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் நெகிழிப் பயன்பாடு தடுப்புச் சட்டத்தை வரவேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பு நிர்வாகிகள் இரா.பாபு, ராஜேந்திரன், சரவணன், அ.வைத்தியநாதன், ஜெய்சங்கர், உமாசெல்வி, தமிழ்ச்செல்வி 
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com