சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல் விநியோகம்

  By DIN  |   Published on : 04th January 2019 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் பாட நூல்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு, பள்ளி செயலர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, தமிழ் வழியில் படிக்கும் 900 மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கும் 360 மாணவர்கள் என மொத்தம் 1,260  பேருக்கு பாடநூல்கள் உள்ளிட்ட தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
  விழாவில், தலைமையாசிரியர் எஸ்.இளங்கோ, தமிழாசிரியர் ஆர்.செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், ராஜேந்திரன், உதவி ஆசிரியை டி.பூர்ணிமாதேவி, ஆசிரியர்கள் நவமணி, குணசேகரன், பழனிவேல், எம்.நாராயணன், விஜயபூபாலன், சசிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai