மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தும் பணியை தொடங்க வலியுறுத்தல்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணியை அரசு விரைவில் தொடங்க வேண்டும் என மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் வலியுறுத்தினர். 

கடலூர் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணியை அரசு விரைவில் தொடங்க வேண்டும் என மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் வலியுறுத்தினர். 
 இந்த அமைப்பின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் நிறுவனர் இரா.மங்கையர்செல்வன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இணை பொதுச் செயலர் கோ.வெங்கடேசன், மாநில செய்தி தொடர்பாளர் கோ.திருமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகி ம.வெ.சிங்காரவேலருக்கு தமிழக அரசு சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும். அவரது பிறந்த நாளை  முன்னிட்டு சாகர்மாலா திட்டத்தை கைவிட வலியுறுத்தி தலை
நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது. 
கடலூர் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணியை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி மீனவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மீன்பிடி மசோதா வரைவு மாநாட்டில் தயாரிக்கப்பட்ட வரைவுத் திட்டம் தொடர்பாக மீனவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அமைப்பாளர் த.சக்திவேல், பொருளாளர் ந.உதயக்குமார், மாநில கருத்துரை பரப்புக்குழு வீ.தங்கதுரை, மாவட்ட இணைச் செயலர் கோ.பழனிவேல், இளைஞரணி வி.கெüதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் பா.ஆனந்தன் நன்றி 
கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com