சுடச்சுட

  

  எல்ஐசி பாலிசி போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, விருத்தாசலத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
   விருத்தாசலம் எல்ஐசி கிளைஅலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலர் கருணாநிதி, பொருளாளர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட அமைப்புச் செயலர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். 
   ஆர்ப்பாட்டத்தில், பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வசதியை அமல்படுத்துதல், அனைத்து முகவர்களுக்கும், 80 வயது வரையிலானவர்களுக்கும் ரூ.30 லட்சம் குழு காப்பீடாக வழங்க வேண்டும், முகவர்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. அறிவித்த கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
   சங்கத் துணைத் தலைவர்கள் ஜெகதீசன், தியாகராஜன், சண்முகம், பெரியசாமி, துணைச் செயலர்கள் கார்த்திகேயன், தங்கதுரை, கலைச்செல்வி, எத்திராஜன் மற்றும்  விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர் ஆகிய எல்ஐசி கிளைகளின் முகவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai