சுடச்சுட

  


  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கடலூர் பிரிவு மூலமாக அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டன. 
  அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன் தொடக்கி வைத்தார். 
  தடகளத்தில் ஆண், பெண்களுக்கு 100மீ, 200மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ தொடரோட்டம் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கு கூடுதலாக 1,500 மீ ஓட்டமும் நடைபெற்றது.
  மேலும், இறகுப் பந்து, டென்னிஸ், கபடி, வாலிபால், கூடைப் பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும், கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெற்றது. போட்டிகளில் சுமார் 120 பேர் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது . 
  போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா கூறினார். ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்திருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai