சுடச்சுட

  


  கடலூர் மாவட்ட ஊர்க் காவல் படைக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
  இதுகுறித்து மாவட்ட ஊர்க் காவல்படை வட்டார தளபதி ஆர்.சுரேந்தர்குமார், துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட ஊர்க் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஊர்க் காவல் படை அலுவலகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
  இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்தவிதமான குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. கூடுதல் விவரங்களுக்கு கடலூரில் உள்ள மாவட்ட ஊர்க் காவல் படை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai