Enable Javscript for better performance
சரநாராயணப் பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சரநாராயணப் பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 06th January 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
    இந்த நிகழ்வை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் மாலை, கிளியை அணிந்து மூலவர் சரநாராயணப் பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னராகவும், ஹேமாம்புஜவல்லி தாயார் வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் காட்சியளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai