சுடச்சுட

  


  சிதம்பரம் பகுதியில் தொடர் நகைத் திருட்டு 
  சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் கணேஷ்குமார் (22). இவர் சனிக்கிழமை சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே நின்றிருந்தார். அப்போது, தில்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கணேஷ்குமாரிடம் இருந்து ரூ.1,500 பணம், கைக் கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன் தனிப் படை அமைத்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் சிதம்பரம் சின்னக்கடைத் தெருவில் டாஸ்மாக் மதுக் கடை அருகே நின்றிருந்த ராஜேஷை சனிக்கிழமை பிற்பகலில் தனிப் படையினர் கைது செய்தனர்.
  போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ராஜேஷ் சிதம்பரம் நகரில் பல்வேறு வீடுகளில் திருடியது தெரியவந்ததாம். கடந்த 3-ஆம் தேதி சிதம்பரம் வாகீசநகரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுவாமிநாதன் (80) என்பவரது வீட்டில் 9.5 பவுன் நகைகள், 4-ஆம் தேதி கோவிந்தசாமி தெருவில் ரேணுகா (35) என்பவரது வீட்டில் ஒன்றரை பவுன் நகை, 
  27-1-2018 அன்று அண்ணாமலைநகர் சரஸ்வதி நகரில் பாஸ்கரன் என்பவரது வீட்டில் 3 பவுன் நகை, அமுதசுரபி நகரில் செல்லம் என்பவரது வீட்டில் அரை பவுன் தோடு, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடியது தெரியவந்ததாம். அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் குமார் வழக்குப் பதிந்து, ராஜேஷை கைது செய்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai