அண்ணாமலைப் பல்கலை.யில் தேசியக் கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையில், தாவரப் பூச்சிக் கொல்லி மற்றும் பூச்சி இனக் 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையில், தாவரப் பூச்சிக் கொல்லி மற்றும் பூச்சி இனக் 
கவர்ச்சி முறைகளில் புதிய உத்திகள் என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வேளாண் பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். கருத்தரங்கு தொடக்க நிகழ்வில், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.இன்னாசிமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். கருத்தரங்கை பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசினார். பூச்சியியல் துறைத் தலைவர் எஸ்.மாணிக்கவாசகம் வரவேற்றார்.
வேளாண் புல முதல்வர் கே.தானுநாதன் வாழ்த்துரையாற்றினார். உதவிப் பேராசிரியர் டி.செல்வமுத்துக்குமரன் கருத்தரங்கு பற்றிய விளக்க உரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் எம்.ரமணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com