சுடச்சுட

  

  உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் சிவ தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.
  திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இருந்து ஆன்மிக நடைபயணம் புறப்பட்டது. முன்னதாக, கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், ஓதுவார் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நடைபயணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற நடைபயணம் புதுப்பேட்டையில் அடுத்துள்ள சித்தவட மடம் சிதம்பரேஸ்வரர் கோயிலில் முடிவடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai