சுடச்சுட

  

  சிதம்பரம் ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சிபிஎஸ்இ பள்ளியில் சிதம்பரம் கல்வி மாவட்ட சாரணர், சாரணீயருக்கான "திவித்ய  சோபன்' 3 நாள் பயிற்சி முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. 
  முகாமில் 20 பள்ளிகளைச் சார்ந்த சாரணர்கள் 203 பேர், சாரணீயர்கள் 102 பேர், ஆசிரியர்கள் 30 பேர் பங்கேற்றனர். பள்ளியின் நிறுவன தலைவர் ஏ.விஸ்வநாதன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரையாற்றினார். பள்ளி முதல்வர் டி.லட்சுமணன்  வாழ்த்திப் பேசினார். மாவட்ட அமைப்பு ஆணையர் ஏ.கயல்விழி வரவேற்றார். மாநில பயிற்சி ஆணையர் ஏ.இளையகுமார், மாவட்ட பொருளாளர் 
  என்.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  பயிற்சி முகாமில் சாரண உடற்பயிற்சி, வனக்கலை குறியீடுகள், முதலுதவி, பல்வேறு வகையான முடிச்சுகள், இயக்க விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. 
  மாவட்ட சாரணீய ஆணையர் சுந்தரி, முன்னாள்  மாவட்ட சாரண ஆணையர் டி.ராசமாணிக்கம், எம்.கமல் கிஷோர் ஜெயின் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 
  முதல் நாள் நிகழ்ச்சியில் ஷெம்போர்டு பள்ளி செயலர் வி.அரிகிருஷ்ணன், பள்ளி முதல்வர் டி.லட்சுமணன், ஜி.ரமேஷ் ஆகியோரும், இரண்டாம் நாள்  நிகழ்ச்சியில் திருச்சி வழக்குரைஞர் எம்.காமராஜ், சிதம்பரம் வீனஸ் குழும கல்வி அதிகாரி மகேஷ் சுந்தர் ஆகியோரும் வாழ்த்துரையாற்றினர். 
  முகாம் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜி.மகேஷ்சுந்தர் பங்கேற்று பேசினார். குமராட்சி வட்டார கல்வி அலுவலர் ஜான்சன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். 
  ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் ஆர்.ரவிக்குமார், அமைப்பு ஆணையர் சுஜாதா, பயிற்சி ஆணையர் வாசுகி, சாரண பொறுப்பாளர்கள் உமா, சரவணன், ஜெயந்தி ஆகியோர் செய்தனர். 
  சிதம்பரம் கல்வி மாவட்ட சாரண செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai