சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது.
   மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் மின்னல் பாய்ந்து உயிரிழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு அரசின் பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சம், அரங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததற்கு அவரது மனைவி கோமதிக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். மேலும், மாவட்ட சமூக நலத் துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர் 10  பேர்  சுயதொழில் தொடங்க தலா ரூ.20 ஆயிரம் காசோலையும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிக்கு செயற்கை காலினையும் ஆட்சியர் வழங்கினார்.
   மேலும், மீன்வளத் துறை சார்பில், மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்தில் மொபட் மற்றும் மீன் பதப்படுத்தும் குளிர்காப்பு பெட்டிகள் 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலமாக மானியத் தொகையாக ரூ.2.58 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரா.கலைபிரதாப் 2017-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்ததற்கு தேசிய மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 
  ரூ.2 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
   கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai