சுடச்சுட

  

  அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக பண்ருட்டியில் பிரசாரம் நடைபெற்றது. 
   பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை தொழிற்சங்கத்தினர், பொது வேலை நிறுத்ததை விளக்கி பொதுமக்களிடம் திங்கள்கிழமை துண்டறிக்கை விநியோகம் செய்தனர். தொமுச கடலூர் மண்டலத் தலைவர் ஆர்.விஜயகுமார், சிஐடியூ தலைவர் ஏ.தேவராஜுலு ஆகியோர் தலைமை வகித்தனர். தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.முரளிதரன், வேல்முருகன், பன்னீர்செல்வம், சி.சங்கர், 
  பழமலை, வீரபத்திரன், முத்துக்குமரன், பாலமுருகன், சிஐடியூ 
  நிர்வாகிகள் ஏ.பாஸ்கரன், கே.சரவணன், ஏழுமலை, டி.சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai