சுடச்சுட

  

  வங்கிகள், காப்பீட்டு சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 08th January 2019 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகில இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆயுள் இன்சூரன்ஸ், பொது இன்சூரன்ஸ் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் திங்கள்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. 
  இதற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் வட்டத் தலைவர் எஸ்.மீரா தலைமை வகித்தார். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.ரமணி முன்னிலை வகித்தார். 
  எல்ஐசி இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் செயலர் கே.பி.சுகுமார், கோட்டத் தலைவர் மணவாளன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஸ்ரீதரன், இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்க உதவி செயலர் ஆர்.குருபிரசாத் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கினர்.
  ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்குதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும். 
  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தப்பட்டன. ஓய்வூதியர் சங்கம் கே.திருமலை நன்றி 
  கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai