கொலை வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

கொலை வழக்கில் மீன்பிடித் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 

கொலை வழக்கில் மீன்பிடித் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, சிதம்பரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கண்ணதாசன் (29). காது கேட்காத, வாய்பேச முடியாதவர். ஆடு வளர்க்கும் தொழில் செய்து  வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி பாலசுப்பிரமணியன் (60). 
கண்ணதாசனின் ஆடுகள் அருகில் உள்ள பாலசுப்பிரமணியனின் தோட்டத்தில் மேய்ந்தது தொடர்பாக இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.  இதுதொடர்பாக 19.1.2015 அன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் வந்த பாலசுப்பிரமணியன் மண்வெட்டியால் கண்ணதாசனின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த கண்ணதாசன்,  சிகிச்சை பலனின்றி  23.9.15 அன்று உயிரிழந்தார்.  இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பறித்தது.  தீர்ப்பில், நீதிபதி சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் அரசு வழக்குரைஞர்  ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com