சுடச்சுட

  

  அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்துக்கு 29 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.140 கோடியில் புதியதாக 555 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில்,கடலூர் மாவட்டத்துக்கு 29 புதிய பேருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், முதற்கட்டமாக 12 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
  இந்தப் பேருந்துகள் காட்டுமன்னார்கோயில்-கும்பகோணம், கடலூர்-சேலம், சிதம்பரம்-சேலம், கடலூர்-சென்னை, சிதம்பரம்-சென்னை ஆகிய வழித்தடங்களில் ஏற்கனவே இயங்கும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதியதாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
  கடந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்துக்கு 30 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவைகள் பெறப்பட்டு ஓடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai