சுடச்சுட

  

  பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, நூல் வெளியீடு, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா,  திருவதிகையில் அண்மையில் நடைபெற்றது.
   விழாவில், சங்கத் தலைவர் சுந்தர.பழனியப்பன் தொடக்கவுரையாற்றினார். பொருளாளர் ராஜா வரவேற்றார். கௌரவத் தலைவர் ப.ச.வைரக்கண்ணு சங்க செயல்பாட்டை விளக்கிப் பேசினார். 
  இந்த நிகழ்வில் கேரளம் தமிழ்ச் சங்கத் தலைவர் நையினார், பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன், புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முந்திரிக்காடு, பலாசுளை ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டார் (படம்). நூலின் முதல் பிரதியை
  பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் கெளரவத் தலைவர்ப.ச.வைரக்கண்ணு, காப்பாளர் புலவர் சஞ்சீவிராயர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
   இதேபோல, அரிமர்த்தன பாண்டியன் எழுதிய "கவிமாமணி சுந்தர பழனியப்பன் பிள்ளைத் தமிழ்' என்ற நூலை திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் நயினார் வெளியிட, சுந்தர.பழனியப்பனின் தாய் சகுந்தலா சுந்தரம், கலைமணி சஞ்சீவிராயர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
   பண்ணுருட்டி தமிழ்ச் சங்க செயலர் முத்துக்குமார் எழுதிய திருக்குறடு நூலை பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன் வெளியிட, முதல் பிரதியை மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
   பொருளாளர் ராசா எழுதிய "புதிய பாதையில்' ஹைக்கூ நூலை கலைச்செல்வி வெளியிட, பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி பெற்றுக்கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai