சுடச்சுட

  

  ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  மருந்து வணிகர்கள் சங்கத்தினர் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் , புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட மருந்து வணிகர்கள் பங்கேற்றனர். 
  தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கச் செயலர்  வெங்கடசுந்தரம், சிதம்பரம் நகரத் தலைவர் கலியமூர்த்தி, செயலர் பாலராம முருகன், பொருளாளர் கண்ணன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத் தலைவர் மோகன்ராஜ், செயலர் மகேஷ், பொருளாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரகாஷ் நன்றி  கூறினார். பின்னர் சங்கத்தினர் உதவி ஆட்சியர் விசுமகாஜனிடம் மனு அளித்தனர். 
  காட்டுமன்னார்கோவில்: இதேபோல, காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கம் அருகே, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலர் இமயவர்மன் தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் சீனிவாச நாராயணன், பாலசந்தர், அலாவூதின், சந்திரசேகர், சேகர், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்செல்வனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai