சுடச்சுட

  

  பெண்ணாடம் அருகே டி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் சிவா (30). விவசாயி. இவர் திங்கள்கிழமை பைக்கில் பெண்ணாடம்-நந்திமங்கலம் சாலையில் டி.அகரம் அருகே சென்றுபோது, எதிரே மேல்ஆதனூரைச் சேர்ந்த வை.வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
  பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai