சுடச்சுட

  

  நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
  போராட்டத்துக்கு மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க துணைத் தலைவர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் யு.மூர்த்தி, எம்.முத்துகுமரன் ஆகியோர் முன்னிலை 
  வகித்தனர். 
  போராட்டத்தில், விவசாயிகளுக்கான வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நிர்வாகிகள் பிரகாஷ், தேன்மொழி, இளங்கோவன், காளிதாஸ், விமல்கண்ணன் உள்ளிட்ட 50-க்கும்  கலந்துகொண்டனர். 
  இவர்கள் அனைவரையும் காட்டுன்னார்கோவில் போலீஸார் கைது செய்து, தனியார்  மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai