கூட்டுப் பண்ணையம்: விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில், வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், கூட்டுப்பண்ணையம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் கடலூரில்

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில், வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், கூட்டுப்பண்ணையம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
முகாமுக்கு, கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை தலைமையேற்று கூட்டுப்பண்ணைய நடைமுறைகள், வருவாயை பெருக்க ஏதுவாக இடுபொருள் வணிக உரிமம், சொட்டுநீர்ப் பாசன முகமை, சிறு தொழில் முனைவோருக்கான கடனுதவி ஆகிய நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். 
வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ஆர்.மோகன்ராஜ், பண்ணைக் கருவிகளின் பயன்பாடு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் பண்ணைக் கருவிகளை கொள்முதல் செய்து பயனடைதல் குறித்து பேசினார். கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் பேசியதாவது:  கடலூர் வட்டாரத்தில் தலா 100 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு வானமாதேவி, வெள்ளக்கரை, சி.என்.பாளையம் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூட்டாக பயிர் செய்வது, இடுபொருள் கொள்முதல் ஆகிய பணிகளை இந்தக் குழுவினர் செய்து வருகின்றனர். மேலும் ஆதார நிதியிலிருந்து ஒவ்வொரு குழுவுக்கும் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி செய்து பண்ணைக்கருவிகள் தருவிக்க விரைவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருவிகள் விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தேவையான பண்ணைக் கருவிகளின் பட்டியலை இறுதி செய்து குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றார் அவர்.
உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.சங்கரதாஸ், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கே.கண்ணன், ஏ.அருண்ராஜ் ஆகியோர் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com