சுடச்சுட

  

  பண்ருட்டியில் ஆற்றுத் திருவிழா நடைபெற்ற உள்ள கெடிலம் ஆற்றில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என, நகராட்சி ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில், புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா அளித்த மனு: பொங்கல் திருநாளை தொடர்ந்து, 19-ஆம் தேதி கெடிலம் ஆற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர். 
  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்.  எனவே, ஆற்றங்கரைப் பகுதியை தூய்மை செய்து, அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடைகாரர்களிடம் நகராட்சி நிர்வாகமே கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai