சுடச்சுட

  

  நெய்வேலியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் பள்ளி வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
  நெய்வேலி நகரிய பகுதியில் உள்ள பள்ளிகளில் அதன் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பலர் வாகனங்கள் மூலமே பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்களின்றி இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
  இதையடுத்து, நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், புதிய அனல் மின் நிலையம் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியதில், அந்த வாகனம் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும், வாகனத்தை ஓட்டி வந்த மந்தாரக்குப்பம், குறவன்குப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (37) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, தெர்மல் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்துக்கு அபராதம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டதாக மோட்டார் வாகன 
  ஆய்வாளர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai