சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக, கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் சார்பில், "கடல் புற்கள் -அவற்றின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
  உயராய்வு மையத்தின் இயக்குநரும், கடல் அறிவியல் புல முதல்வருமான பேராசிரியர் சீனிவாசன் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தொடக்கி வைத்தார். 
  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், முன்னாள் கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் இல.கண்ணன், கடல் புற்கள், அதன் பாதுகாப்பு அவசியம் குறித்துப் பேசினார்.
  தொடர்ந்து, முனைவர்கள் 
  க.சிவக்குமார்,  பி.அனந்தராமன், பாலாஜி (ஓம்கார் அறக்கட்டளை), தி.தங்கராஜு ஆகியோர்  கடல்புற்களும் பருவகால மாற்றமும், கடல்புற்கள் நடவு, கடல் பசுக்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து கருத்துரையாற்றினர்.
  கருத்தரங்கில் பல்கலை. அறிவியல் புல முதல்வர் கபிலன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்புச் செயலரும், உதவிப் பேராசிரியருமான  க.சிவக்குமார் வரவேற்றார். மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்பத் துறையின், அறிவியல் அறிஞர் முனைவர் தங்கராஜு, கடல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கடல்புற்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினர்.
  பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சிப் பயிலரங்கில் கலந்து கொண்டனர். முனைவர் அனந்தராமன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai