சுடச்சுட

  

  வடலூர், கருங்குழியில் உள்ள ஏரிஸ் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவை கல்லூரித் தலைவர் ச.தியாகராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறை வாரியாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு படையலிட்டனர்.
  விழாவில் பேராசிரியர்களுக்கு இசை நாற்காலிப் போட்டியும், மாணவிகளுக்கு கபடி, கோலம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai