நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை சார்பில், சிதம்பரம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை சார்பில், சிதம்பரம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து, மரக்கன்றை நட்டுவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். சார்பு நீதிபதி, வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவர் வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் வரவேற்றார். 
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நிதிபதி எம்.அறிவு, நீதித் துறை நடுவர் எண். 1  நீதிபதி எஸ்.டி.ஆயூஷ்பேகம், நீதித் துறை நடுவர் எண். 
2 நீதிபதி ஆர்.பார்த்திபன்,  அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆர்.எம்.எஸ்.டி.சுப்பையா, வி.ரவிச்சந்திரன், ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி சென்ட்ரல் சங்கச் செயலர் எஸ்.நடராஜன் நன்றி கூறினார். விழாவில் புதிய நீதிமன்ற வளாகத்தில் நூறு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com