பொங்கல் பரிசு விநியோகம்: எம்.பி. தொடக்கி வைத்தார்

சிதம்பரத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சியை அருண்மொழிதேவன் எம்.பி. புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

சிதம்பரத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சியை அருண்மொழிதேவன் எம்.பி. புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள 14 ஆயிரத்து 672 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில், சிதம்பரம்  மானாசந்து  நியாயவிலைக் கடையில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் சிறப்புப் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழாவுக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., மா.சந்திரகாசி எம்.பி., முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கத் துணைப் பதிவாளர் வெங்கடாஜலபதி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான ஏ.அருண்மொழிதேவன் பங்கேற்று, பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பையும், விலையில்லா வேட்டி, சேலைகளையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிப் பேசினார்.
விழாவில் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கச் செயலர் எம்.ஜி.ரவிச்சந்திரன், சங்க மேலாண்மை இயக்குநர் செல்வகுமாரகிருஷ்ணன், ஆவின் பால் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், சேத்தியாதோப்பு சர்க்கரை ஆலைத் தலைவர் பாலசுந்தரம், துணைத் தலைவர் விநாயகம், தேன்மொழி காத்தவராயசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், தில்லை சேகர், நகர நிர்வாகிகள் நாகராஜன், வீரமணி, புவனேஸ்வரி, ஒன்றியச் செயலர்கள் அசோகன், சிவபிரகாசம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி, கருப்பு ராஜா, பாலமுருகன், செல்வரங்கன், நடனசபாபதி தீட்சிதர், செல்வம், சக்திவேல், சந்தர்ராமஜெயம், ஜெயசீலன், ராஜ்மோகன், பானு, சுசீலா, உஷா உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் நன்மாறன் நன்றி 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com