Enable Javscript for better performance
காவலர் பயிற்சிப் பள்ளியில் பொங்கல் விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    காவலர் பயிற்சிப் பள்ளியில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

    By DIN  |   Published on : 12th January 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவலர் பயிற்சிப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 
    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் புதிதாக காவல் துறைக்கு தேர்வான 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருவோருக்கு பள்ளி முதல்வரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான ப.சரவணன் தலைமையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, மைதானத்தில் பொங்கலிடப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பயிற்சி காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 
    இதில், ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கையுந்துப் பந்து (வாலிபால்), கயிறு இழுத்தல் உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் பழனி, சட்ட போதகர் தேவி, கவாத்து போதகர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai