சுடச்சுட

  

  கடலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட  மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பிரிவு-2, பிரிவு-2ஏ பணியிடத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
   இந்தப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை (ஜன.12) தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேற்கூறிய தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பயிற்சியில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி மையத்தால் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், திரளானோர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நூலக அலுவலர் 
  பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai