சுடச்சுட

  

  திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் நடைபெறும் கரை சீரமைப்புப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சி.வெ.கணேசன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
  கரைகளை பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெலிங்டன் நீர்த் தேக்க கரையை சீரமைக்க தமிழக அரசு ரூ.36 கோடி ஒதுக்குவதாக அறிவித்த நிலையில், பணிகள் இன்னும் தொடங்காதது விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. மேலும், தற்போது தற்காலிகமாக நடைபெறும் சீரமைப்புப் பணியும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. வெலிங்டனை நம்பியுள்ள விவசாயிகள் ஏற்கெனவே வறுமையில் சிக்கி கடனாளியாக மாறி வருகின்றனர். வரும் ஆண்டிலாவது வெலிங்டனில் நீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு அளிக்காவிட்டால் இந்தப் பகுதியில் விவசாயம் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வெலிங்டன் நீர்த் தேக்கத்தை முறையாக சீரமைத்து, திட்டக்குடி தொகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.
  திமுக மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகரச் செயலர் பொன்.பரமகுரு, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai