காவலர் பயிற்சிப் பள்ளியில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவலர் பயிற்சிப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காவலர் பயிற்சிப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் புதிதாக காவல் துறைக்கு தேர்வான 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருவோருக்கு பள்ளி முதல்வரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான ப.சரவணன் தலைமையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, மைதானத்தில் பொங்கலிடப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பயிற்சி காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 
இதில், ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கையுந்துப் பந்து (வாலிபால்), கயிறு இழுத்தல் உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் பழனி, சட்ட போதகர் தேவி, கவாத்து போதகர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com