சிதம்பரம் நகரச் சாலைகளைச் சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு 

சிதம்பரம் நகரச் சாலைகளைச் சீரமைக்க சிறப்பு நிதியிலிருந்து ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கூறினார்.

சிதம்பரம் நகரச் சாலைகளைச் சீரமைக்க சிறப்பு நிதியிலிருந்து ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கூறினார்.
 புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள்-தொடர்பு கள அலுவலகமும், சிதம்பரம் நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமில், தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று பேசியதாவது: 

தமிழ்நாட்டில் தலைசிறந்த நகராட்சிகளில் ஒன்றாக சிதம்பரம் நகராட்சி விளங்குகின்றது. இந்த நகராட்சியில் 3 இடங்களில் மக்கும் குப்பையைப் பயன்படுத்தி நுண் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் விரைவில் முடிக்கப்படும்.

நகராட்சியில் பல இடங்களில் தார் சாலைகளை செப்பனிட உள்ளாட்சித் துறை அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மின் தகன மேடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.  நகராட்சியில் நெகிழிப் பொருள்களின் உபயோகத்தை முழுவதுமாக நீக்க வேண்டும் என்றார் அவர். 

நிகழ்ச்சிக்கு மக்கள்-தொடர்பு களஅலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.  சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமஹாஜன் தொடக்கவுரை ஆற்றினார்.  அவர் பேசுகையில், தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார். நகராட்சி ஆணையர் வி.சுரேந்திரஷா கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் மகளிருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு,பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக களவிளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் வரவேற்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.தர்மராஜா நன்றி கூறினார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com