10 சதவீத இடஓதுக்கீடு: கார்காத்த வேளாளர் சங்கம் வரவேற்பு

பிற்பட்டோர் பட்டியலில் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற


பிற்பட்டோர் பட்டியலில் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழ்நாடு கார்காத்தார் வேளாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கே.கே.ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை: 
உயர் சாதியினர் எனக் கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்தப் பிரிவினரில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் அன்றாடம் உணவுக்கே அவதிப்படும் நிலையும் உள்ளது. 
இவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. 
எனவே தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்பட்டோர் பட்டியலில் இல்லாத இதர மக்களுக்கும் 10% இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்க அம்சமாகும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com