விவேகானந்தர் பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

கடலூர் மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்விழா தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது. கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் கவிஞர் கடல்.நாகராஜன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். துர்கா பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில் முருகன், விவேகானந்தர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எழுத்தாளர் தில்லை ராஜேந்திரன், கவிஞர் ம.சிங்காரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். மன்ற பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
விருத்தாசலம் அருகே மணலூர் ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா பள்ளி முதல்வர் ஆர்.ராஜாமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் எஸ்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். 
அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் அருள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நெகிழி தடை குறித்த விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் அ.சந்திரசேகர் நன்றி கூறினார்.
சிதம்பரம்: சிதம்பரம் நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டச் செயலர் ஜோதி.குருவாயூரப்பன் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். விவேகானந்தர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி தலைமைக் கழகப் பேச்சாளர் கேசவபெருமாள்ஜி சிறப்புரையாற்றினார். விழாவில் நகரத் தலைவர் தண்டபாணி, மாவட்ட சேவைப் பிரிவு செயலர் ஜெயமுரளி கோபிநாத், திருப்பார்கடல் பாலு, பாஜக பாலகிருஷ்ணன், ராஜா, உ.வெங்கடேச தீட்சதர், பஜ்ரங்தல் குருமூர்த்தி, அருள், முத்து, கார்த்திக், திருவாடுதுறை மடத்தின் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் முத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com