சுடச்சுட

  

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மங்கலம்பேட்டையில் மாவட்டத் தலைவர் கே.ஏ.அமானுல்லா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் ஏ.ஷபீகுர் ரஹ்மான், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவர் மவ்லவி.ஏ.ஷபியுல்லா, கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர்கள் ரஷித்ஜான், யு.சல்மான் பாரிஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
  கூட்டத்தில், வருகிற பிப்.16-ஆம் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் கட்சி மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது. விசாரணைக் கைதிகளாக சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். 
  உளுந்தூர்பேட்டையிலிருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு மங்கலம்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், சேத்தியாதோப்பு வழியாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், மாவட்ட இணை அமைப்புச் செயலர் எம்.நூருல்லா, மாவட்ட இளைஞரணிச் செயலர் ஏ.ஆர்.சுஜாவுதீன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் முஹம்மது முபாரக்,  நகரத் தலைவர் நூர் முஹம்மது, செயலர் எம்.ஏ. சர்தார், பொருளாளர் ஹபிபுர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  முன்னதாக, மாவட்ட செயலர் ஏ.சுக்கூர் வரவேற்க, மாவட்ட பொருளாளர் ஏ.சகாபுதீன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai