சுடச்சுட

  

  பொங்கல் விழாவை முன்னிட்டு செம்மங்குப்பம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. 
  கடலூரில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை பராமரிப்புத் துறை, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த முகாமை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் கஸ்தூரி தொடக்கி வைத்தார். முகாமில், சினையுறாத மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல், சினை ஊசி போடுதல், பலகீனமான கால்நடைகளுக்கு தாது உப்பு, சத்து மருந்து அளித்தல், மாடு , ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து அளித்தல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  பேராசிரியர்கள் வெங்கடபதி, எம்.முரளி, உதவி இயக்குநர் 
  ராகவன், கால்நடை மருத்துவர்கள் மரியசூசை நிக்ஸன், சுந்தரம், ஸ்டாலின், நரேந்திரன் ஆகியோர் சிகிச்சையளித்தனர். முகாமில், சுமார் 500 கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் மெய்கண்டன், கார்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai