சுடச்சுட

  

  நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குற்றத் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நெய்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நெய்வேலி நகரியம், தெர்மல், மந்தாரக்குப்பம், ஊ.மங்கலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் டிஎஸ்பி சரவணன் பேசுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai