சுடச்சுட

  

  போகிப் பண்டிகையை மாசற்ற வகையில் கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்படி திங்கள்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. "பழையன கழிதல்' என்ற முறையில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. 
  அவ்வாறு எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு இருமல், கண், மூக்கு எரிச்சல், சுவாச நோய், நுரையீரல் பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுக் காற்றாலும், கரிப் புகையாலும் காற்று மாசுபட்டு நமது நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனிமூட்டத்தால் சாலைப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், உயர் நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது.  எனவே, பொதுமக்கள் பழைய துணிகளை எரிக்காமல் பிறருக்கு கொடுத்து உதவலாம். மேலும், டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை எரிக்காமல் போகிப் பண்டிகையை மாசற்ற பண்டிகையாக மக்கள் கொண்டாட வேண்டும் என்று ஆட்சியர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai