பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
 காட்டுமன்னார்கோவில் எம்ஜிஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் துறைத் தலைவர் சிற்றரசு வரவேற்றார். பேராசிரியர்கள் சரவணன், ஜமுனாராணி, பூபாலன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் தென்னரசு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலிட்டனர். தொடர்ந்து, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். கௌரவ விரிவுரையாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.
 காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற  சமத்துவ பொங்கல் விழாவை கல்லூரி சேர்மன் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் கே.விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜி.கே. பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வட்டாட்சியர் தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள் தமிழரின் கலாச்சார உடையணிந்து  கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஜி.கே. கல்விக் குழும நிறுவனர் ஜி.கே.குமாரராஜா, நிர்வாக இயக்குநர் ஜி.கே.அருண், இயக்குநர் ஜி.கே.அகிலன் ஆகியோர் பங்கேற்றனர். 
 காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளி நிறுவனர் வீர.முத்துக்குமரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள் விழாவை தொடக்கி வைத்தார். பள்ளி தாளாளர் பரணிதரன் முன்னிலை வைத்தார். பேரூராட்சி மேற்பார்வையாளர் சாந்தி பங்கேற்று நெகிழி, புகை இல்லா பண்டிகையை கொண்டாட வலியுறுத்திப் பேசினார். பள்ளி முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார். மேலும் பள்ளி சார்பில் நெகிழி ஒழிப்பு  விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. பேரணியை காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் தொடக்கி வைத்தார்.
நெய்வேலி: நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து நர்பவி வித்யாலயா மற்றும் ஜீனி கிட்ஸ் மழலையர் பள்ளி சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் காயத்திரி தேவி துரை, முதன்மை செயல் அதிகாரி ஆர்.துரை ஆகியோர் தலைமை வகித்தனர். தைப்பூச பாத யாத்திரைக் குழுவைச் சேர்ந்த ம.உமாதேவன், மக்கள் பாதை பிலிப்ஸ் மற்றும் குழுவினர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.ஜெகன் பங்கேற்று கலை நிகழ்ச்சி, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
வடலூர்: வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளி முதல்வர் சுகிர்தா தாஸம், நிர்வாக இயக்குநர் தீபக் தாமஸ் முன்னிலையில் சமத்துவ பொங்கலிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com