சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சார்பில், "குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை இ.லட்சுமி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் என்.ராமதாஸ் வரவேற்றார். நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி ப.சரவணன் பங்கேற்று, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டு புத்தகம், மரக் கன்று, விதைப் பந்துகளை வழங்கி பேசினார்.
   சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கடலூர் மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா பேசுகையில், பெண்கள் தற்காப்பு, எச்சரிக்கையுடன் செயல்படுதல் குறித்து விளக்கினார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் டி.கனகசபை, வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குறிஞ்சிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.பிரசன்னா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai