சுடச்சுட

  

  பண்ருட்டியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   பண்ருட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரபத்மநாபன் தலைமையில் நான்கு முனைச் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எமதர்மர், சித்திரகுப்தர் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
   வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது, சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து போலீஸார் உடனிருந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai