சுடச்சுட

  

  சபரிமலையின் புனிதம் காத்திட வேண்டி, பண்ருட்டி பகுதியில் 108 இடங்களில் செவ்வாய்க்கிழமை விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
  சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில்,  சபரிமலை புனிதம் காத்திட நாடு தழுவிய அளவில் மகர ஜோதி தரிசன நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
  அதன்படி, செவ்வாய்க்கிழமை பண்ருட்டி வட்டம் முழுவதும் 108 இடங்களில் சுவாமி ஐயப்பன் படம் வைத்து பூஜை செய்து சரண கோஷம் எழுப்பி, விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை புனிதம் காத்திட வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர். 
   பண்ருட்டி, காந்தி சாலை வரதராஜ பெருமாள் சன்னதி அருகே நடைபெற்ற வழிபாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி நாராயணன், இந்து சமுதாய ஆன்மிக 
  அறக்கட்டளை துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கெளரவத் தலைவர் கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai