சுடச்சுட

  

  சிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா பொருத்த எம்எல்ஏ நிதியுதவி

  By DIN  |   Published on : 17th January 2019 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நகரில் 100  இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவதற்காக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 
  இதையடுத்து, பணிகளை உடனடியாக தொடங்குவதற்காக முன் பணமாக ரூ.2 லட்சத்தை வழங்கினார். எம்எல்ஏ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வழங்கினார்.
  நிகழ்ச்சிக்கு நகர காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  அதிமுக நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் , சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் விநாயகம், ஊராட்சிச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai