சுடச்சுட

  

  ஆரணியில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தார்ச் சாலைப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
   ஆரணி ஆற்றுப்பாலம் அருகிலிருந்து ஆற்காடு நெடுஞ்சாலை வரை ரூ.2.50 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஆரணி ஆற்றுப்பாலம் அருகிலிருந்து ஆற்காடு நெடுஞ்சாலை வரையுள்ள பகுதியில் 4 வழிச்சாலை ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலையின் நடுவில் ஹைமாஸ் மின் விளக்குகள் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.
  ஆரணியை அடுத்த சேவூரில் கிராம தொடக்கப் பகுதியிலிருந்து 200 மீட்டர் நீளத்துக்கு ரூ.40 லட்சத்தில் நான்கு வழிச்சாலையும், சேவூர் பேருந்து நிறுத்தத்தில் ரூ.20 லட்சத்தில் பயணிகள் நிழல்
  குடையும் அமைக்கப்படவுள்ளன.
  ஆரணி பகுதியில் இ.பி.நகர், சேவூர், அடையபுலம், சிறுமூர், அரியபாடி, கணிகிலுப்பை ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் 1,200 மீட்டர் தொலைவுக்கு ரூ.41.28 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் உள்பட ஆரணி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
  அப்போது, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர ஜெயலலிதா 
  பேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, மாணவரணி குமரன், புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai