சுடச்சுட

  

  பண்ருட்டி ரத்தனா இறகுப் பந்துக் கழகம் சார்பில், இரண்டாம் ஆண்டு இறகுப் பந்துப் போட்டி கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்து போட்டிகளை தொடக்கிவைத்தார். 
  ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், இயக்குநர் பாலகிருஷ்ணன், முதல்வர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  சாந்தமூர்த்தி, மணிகண்டன் நடுவர்களாக செயல்பட்டனர்.  போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.
  பரிசளிப்பு விழா..
  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கழக வளாகத்தில் நடைபெற்றது. 30 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதல் பரிசை முருகன், சதீஷ், 30 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முகமது பைசல், ரஞ்சித் ஆகியோர் பெற்றனர். இதற்கான பரிசுத்தொகை தலா ரூ.10 ஆயிரத்தை  தொழிலதிபர் எஸ்.வி.அருள்  வழங்கினார். 
  இதேபோல, 2-ஆம் பரிசு பெற்ற விஜி, தமிழ், திலீபன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு காடாம்புலியூர் தொழிலதிபர் கதிரவன் தலா ரூ.7 ஆயிரமும், 3-ஆம் பரிசு பெற்றவர்களுக்கு தொழிலதிபர் ராஜ்மோகன் தலா ரூ.5 ஆயிரமும், 4-ஆம் பரிசுக்கான தொகை ரூ.2,500 மதன்சந்த் ஆகியோர் வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai