சுடச்சுட

  

  காணும் பொங்கல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள்

  By DIN  |   Published on : 18th January 2019 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  காணும் பொங்கலை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 
  கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ, இளைஞர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இதனால் நடராஜர் கோயில் விழாக்கோலம் பூண்டது. மக்கள் திரளாக கூடி போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.  
  பிச்சாவரத்தில் அலை மோதிய கூட்டம்:  சிதம்பரம் அருகே சுரபுண்ணை காடுகள் அடங்கிய பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகு சவாரி செய்ய அதிகமானோர் வந்ததால் கூட்டம் அலை மோதியது. வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமானோர் வந்தனர். இதனால் 
  படகுசவாரி செய்யும் இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai