சுடச்சுட

  

  தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் 200 இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
  கட்சியின் மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்தார். 
  நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், வழக்குரைஞர் தமிழழகன், மாநில வன்னியர் சங்கத் தலைவர் தனசேகர், மாநில மாணவர் சங்கச் செயலர் கோபி, மாநில இளைஞர் சங்கத் துணைத் தலைவர் விஜயவர்மன், மாநில அமைப்பு துணைச் செயலர் பி.ஆர்.பி.வெங்கடேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியா, நகரத் தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலர் மணி, மாவட்டத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  
  இந்த நிகழ்ச்சியையொட்டி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைவருக்கும் பாமக கொள்கை விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai